Sunday, October 19, 2014

24 மணி நேரத்தில் டப்பிங் முடித்த ரஜினிகாந்த்...

திரையில் மட்டும்தான் ரஜினிகாந்த் வேகமானவர் என நினைக்க வேண்டாம். திரைக்குப் பின்னும் ரஜினிகாந்தின் வேகம் 'லிங்கா' குழுவினரை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம். 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று திட்டமிட்டபடி முடிந்தது. ரஜினிகாந்தின் ஒத்துழைப்பை மிகவும் ஆச்சரியமாகப் பார்த்து அதிசயித்துள்ளது படக் குழு. சில காலம் அவர் ஓய்வில் இருந்து வந்தாலும், மீண்டும் அதே சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் இருந்ததுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.சமீபத்தில் படத்திற்காக ரஜினிகாந்த் 24 மணி நேரத்திற்குள்ளாகவே மொத்த படத்தின் டப்பிங்கையும் முடித்து விட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அனைத்து காட்சிகளையும் ஒரே டேக்கில் டப்பிங் பேசிவிட்டாராம். போகும் போது ஏதாவது காட்சி சரியாக இல்லையென்றால் மீண்டும் வந்து பேசிக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றாராம். ஆனால், அவர் முதலில் பேசியதே அவ்வளவு பர்ஃபெக்டாக இருந்தது என்கிறார்கள். 'படையப்பா' படத்தில் வரும் 'வயதானாலும் உன் வேகம் இன்னும் குறையலை' என்ற டயலாக்கைத்தான் அவர்கள் ஞாபகப்படுத்திக் கொண்டார்களாம்.

சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த், சந்தானத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானதிலிருந்தே இவ்வளவு இளமையாக இருக்கிறாரே ரஜினிகாந்த் என மற்ற இளம் ஹீரோக்கள் பொறாமையுடன் பேசிக் கொண்டதாகக் கூட கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன



No comments:

Post a Comment