Sunday, October 19, 2014

யுரேனஸ் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்தில் யுரேனஸ், நெப்டியூன் என்ற கிரகங்கள் உள்ளன. அவை ராட்சத ஐஸ்
கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் ஹைட்ரஜன் மற்றும் ஹுலியம் வாயுக்களால் நிறைந்தது. இதனால் அங்கு மீத்தேன் ஐஸ் வடிவத்தில் உள்ளது. எனவே, அக்கிரங்கள் நீலநிற தோற்றத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையே தற்போது ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியில் இருந்து 25 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது.
இதில் என்னென்ன ரசாயன பொருட்கள் உள்ளன என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதன் அமைப்பு யுரேனஸ் கிரகம் போன்று உள்ளது.

இந்த தகவலை ஒகியோ மாகாண பல்கலைக்ழக விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் ஆண்ட்ரூ குட் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment