Sunday, October 19, 2014

விஜய் நடிக்கும் மாரீசன் படத்தின் கலை இயக்குநரை பாராட்டிய ஒளிப்பதிவாளர்

விஜய் நடித்த கத்தி படம் ரிலீஸிற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. எனவே கத்தி படத்தைப் பற்றிய தகவல்களே ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலம் நிறைந்துள்ளன. இந்நிலையில், சிம்புதேவன்
இயக்கத்தில் விஜய் மாரீசன் நடிக்கும் படத்தைப் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. 100 கோடி பட்ஜெட்டில் விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமாரும், கேரளாவை சேர்ந்த தமீன் ரிலீஸ் ஷிபு என்பவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

 இப்படத்தில் நான் ஈ சுதீப்பும், நடிகை ஸ்ரீதேவியும் நடிப்பதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் நடிக்கவில்லை என செய்திகள் வெளியாகின. சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகனாக நடித்த நட் என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மாரீசன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருப்பதையும், சென்னை ஈசிஆரில் பிரம்மாண்டமான தர்பார் செட் ஒன்றை கலை இயக்குனர் முத்துராஜ் உருவாக்கி வருவதையும் ஏற்கனவே எழுதி இருந்தோம். அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ், என்ன ஒரு கலை இயக்குனர்... அற்புதம் மிஸ்டர் முத்துராஜ்! என ட்வீட் பண்ணி இருக்கிறார்

No comments:

Post a Comment