Sunday, October 19, 2014

விஜய் படத்துக்காக நடிக்கும் படங்களை தள்ளி வைக்கும் நட்ராஜ்

நட்டு என்கிற நட்ராஜ் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்தான். ஆனால் இந்தியில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர். சமீபத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த இந்திப் படமான ஹாலிடே
(தமிழ் துப்பாக்கி) மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதோடு நட்டி தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சக்கரவியூகம், மிளகா, உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சமீபத்தில் நடித்த சதுரங்க வேட்டை அவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது. ஜீவா படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார்.

சதுரங்க வேட்டையின் வெற்றிக்கு பிறகு நட்ராஜுக்கு நிறைய ஹீரோ வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் நட்டி அடுத்து விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளார். அதனால் விஜய் படத்தை முடித்து கொடுத்த பிறகே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்.
 இதற்காக தன்னை தேடி கதை சொல்ல வருகிறவர்களிடம் விஜய் படம் முடிந்த பிறகே நடிக்க முடியும் என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறார். தற்போது விஜய் படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து லொக்கேஷன் பார்த்து வருகிறார். தான் நடித்துக் கொண்டிருந்த கதம் கதம் என்ற படத்தையும் முடித்து கொடுத்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளிவரும் என்று தெரிகிறது


No comments:

Post a Comment