பாலா இயக்கும்
தாரைதப்பட்டை படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் சில வாரங்கள் நடந்தது.
இதில் சசிகுமார் நீண்ட தாடியுடன் நடித்தார். படப்பிடிப்பு
முடிந்ததும் எடுத்த வரை
உள்ள காட்சிகளை போட்டுப் பார்த்த பாலாவுக்கு சசிகுமாரின் நீண்டதாடி தோற்றத்தில்
திருப்தி இல்லையாம். இதனால் தனது மற்ற நண்பர்களுக்கும் இதனை போட்டுக்
காட்டியிருக்கிறார். அவர்களும் சசிகுமாரின் தோற்றம் ரசிக்கும்படி இல்லை என்று
சொல்லியிருக்கிறார்கள்.
இதனால் சிகை அலங்கார நிபுணர் வரவழைக்கப்பட்டு பல விதங்களில் செய்து
பார்த்துள்ளார். பின்னர் அவர் எப்போதும் வைத்திருக்கும் தாடியை விட கொஞ்சம்
அதிகமாக வைத்திருந்தால் போதும் என்று முடிவு செய்யப்பட்டதாம். இதனால் ஏற்கெனவே
எடுத்த காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட இருக்கிறதாம்.
"ஏற்கெனவே நடந்தது ஒரு ட்ரைல் ஷூட்தான் (ஒத்திகை படப்பிடிப்பு) முறைப்படியான
படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. பாலா எந்த படம் ஆரம்பித்தாலும் முதலில்
படத்தில் நடித்தவர்களை நடிக்க வைத்து திருப்தி ஏற்பட்ட பிறகே படப்பிடிப்புக்கு
செல்வார். அப்படித்தான் தாரைதப்பட்டையிலும் நடந்தது" என்கிறார்கள் பட
யூனிட்டார்
No comments:
Post a Comment