என்னமோ சொல்லணும்னு நினைச்சேன்.. மறந்
துட்டேன்... மன்னிச்சுக்கோ.. இன்னிக்கு உன்னோட
பிறந்தநாள் இல்ல... மறந்தே போயிட்டேன்..
. ஆமா...இங்கே
எதுக்கு வந்தோம்?
இவரை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு... ஆனா, யாருன்னு தெரியலையே..! எப்போதாவது மறதி வருவது இயல்பானதுதான். ஆனால்,
அடிக்கடி இதுபோல் எதை யாவது மறந்துவிட்டு
அவஸ்தைப்படுகிறீர்களா? இது மறதி நோயின் அறிகுறியாக
இருக்கலாம் என்கிறது மருத்துவ உலகம். வயதானால் மறதி வரத்தானே செய்யும்? என்கிறீர்களா?
இது வயதானவர்கள்
சமாச்சாரம் அல்ல..! இருபது வயதில் இருக்கும் இளம் பருவத்தினருக்கும் உள்ள
பிரச்சினை. 20 முதல் 40 வயது வரையிலான காலகட்டத்தில் தான் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைகள் என்று வாழ்வின் மிக
முக்கியமான நிகழ்வுகள் நடக்கின்றன.
இந்த நேரத்தில் ஒருவர்
தெளிவான சிந்தனையோடும் நடவடிக்கைகளோடும் இருந்தாக வேண்டும். மறதி நோய் ஏற்பட்டால், இரண்டு திறன்களும் பாதிக்கப்பட்டு தான் போய் சேர விரும்புகிற இடத்தை ஒருவரால் அடைய முடியாமல்
போகலாம். மறதியினால் நிறைய இழப்பீடு வருவதை தவிர்க்கவேமுடியாது என்று எச்சரிக்கை
செய்கிறார் நரம்பியல் சிகிச்சை நிபுணர் சிறீனிவாசன்.
சின்ன வயதிலேயே எதனால்
மறதி வருகிறது? மறதி ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்பது உட்பட மேலும் பல
சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கிறார் அவர்.
எல்லாமே தலைமைச்
செயலகம்தான்...மறதி ஏன் வருகிறது என்பதற்கு முன்னால் மறதி என்றால் என்ன வென்று
அறிவியல்பூர்வமாகக் கொஞ்சம் பார்ப்போம். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது என எல்லாவற்றையும் பதிய
வைத்துக் கொள்வது நமக்குத் தலைமைச் செயலகமாக இருக்கும் மூளையில்தான்.
அடுக்கடுக்காக மூளையில்
பதிவாகும் இந்த கோப்புகளை நமக்குத் தேவைப்பட்டபோது எடுக்க முடியாவிட்டால்
அதைத்தான் மறதி என்கிறோம். இதற்குக் காரணம் மூளையில்
இருக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்களின் செயல்களில் ஏற்படும் பாதிப்புதான்.
மறதியில் மூன்று வகை
இளைஞர்களுக்கு ஏற்படும்
மறதி நோய்க்கு அம்னீசியா என்று பெயர். இந்த அம்னீசியாவில் மூன்று வகைகள் இருப்பதாக
சமீபத்திய அமெரிக்க ஆய்வில் கண்டறிந்
திருக்கிறார்கள். இளைஞர்கள் பெரும்பாலும் பாதிக்கப் படுவது முதல் வகையில்தான். இந்த பாதிப்பு ஏற் பட்டால்
இளைஞர்களின் அறிவுத்திறன் பாதிக்கப்படும்.
சம்பவங் களை மனதில் பதிந்து
வைத்துக் கொள்ள முடியாது. பழைய நிகழ்வுகள் நினைவிருக்காது.
பெயர்களில் குழப்பம் இருக்கும். போன பாதையில் திரும்பி வருவதற்குக் கூட
சிரமப்படுவார்கள். கடைகளில் சில்லறை வாங்க மறப்பது முதல் செல்பேசியை வைத்துவிட்டுத் தேடுவது வரை பல அன்றாடப் பிரச்சினைகள் அடங்கிய மறதி
இது.
மனதில் இருப்பதை வெளியில்
சொல்லத் தடுமாறுவார்கள். இரண்டாவது வகை Retrograde Amnesia. இது விபத்துகளால்
ஏற்படும் மறதி நோய். சினிமாக்களில் பார்த்திருப்போம், தலையில் அடிபட்டவுடன் பழைய நிகழ்ச்சிகளை மறந்துவிடுவார்கள். மூன்றாவது வகை Transient Global Amnesia. கொஞ்சம் வினோதமானது.
இயல்பாக ஒருவருடன்
பார்த்து, பேசி, பழகுவார்கள். ஆனால், சில நிமிடங்களிலேயே தான் பேசிக்
கொண்டிருந்த நபரை அடையாளம் தெரியாது.
பேசியதும்
நினைவிருக்காது.இது தவிர சமீபத்தில் டிஜிட்டல் டிமென்ஷியா என்ற மறதி நோயும்
இளைஞர்களிடம் பரவி வருகிறது. தேவைக்கதிகமாக அலைபேசி, கணிப்பொறி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று மின்னணு சாதனங்
களைப் பயன்படுத்துவதால் வரும் மறதி நோய் இது.
இந்தப் பயன்பாடுகளைக்
குறைத்தாலே டிஜிட்டல் டிமென்ஷியாவுக்கு ஆளாகாமல் தப்பிக்க முடியும். இந்தக்
காரணங்கள் தவிர மரபியல் காரணங்களாலும் மனநலக் கோளாறுகளாலும்
சிலருக்கு மறதி நோய் வரலாம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
மறதி நோய் பொதுவாக 20 வயது முதல் 90 வயது வரை யாருக்கு
வேண்டுமானாலும் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வயதானவர்களுக்கு வருகிற மறதிநோய்களை அவர்களுடைய குழப்பமான நடவடிக்கையே காட்டிக் கொடுத்து
விடும்.
அதனால்,கண்டுபிடிப்பது சுலபம். ஆனால், இயல்பான நடவடிக்கைகளோடு இருக்கும் இளைஞர்களின் மறதிநோயை எளிதில் கண்டுபிடிக்க
முடியாது. தங்களைத் தாங்களாகவே உன்னிப்பாகக் கவனித்தாலோ அல்லது அருகில் இருப்பவர்கள் சுட்டிக் காட்டினால் ஒழிய இதைக் கண்டறிவது
கொஞ்சம் சிரமம்.
மறதி நோய் இருப்பதாக
சந்தேகப்பட்டால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரிடமோ அல்லது மனநல நரம்பியல் சிகிச்சை
நிபுணரிடமோ சென்று ஆலோசனை செய்து கொள்ளலாம்.
அவர்கள் சில பரிசோதனைகளை செய்து மறதி நோய்
இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள். மறதி நோயைக் கண்டுபிடித்த பிறகு, நரம்பியல் சிகிச்சை நிபுணரிடம் சென்று
சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment