'கடல்' படத்தையடுத்து, மணிரத்னம்
இயக்கும் புதிய படத்திற்கு, 'ஒகே
கண்மணி' என்று பெயர்
வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த
படத்தின் நாயகியாக நடிக்கும் நித்யா மேனனை சுற்றித்தான் கதை நகர்கிறது.இதுபற்றி
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'மணிரத்னம் என் மனம் கவர்ந்த இயக்குனர். அவர்
படத்தில் நடிக்க வேண்டுமென்ற நீண்ட கால கனவு, இப்போது தான் நனவாகியுள்ளது. துல்கர்
சல்மானுடன், இரண்டு மலையாள படங்களில் நடித்துள்ளேன்.
அவருக்கும், எனக்குமிடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்
அவுட்டாகியிருந்தது. அதனால், காதலை மையமாக கொண்ட இந்த படத்திலும், தமிழகமே
கொண்டாடும் வகையில், எங்களது
கெமிஸ்ட்ரி வெளிப்படும். இந்த படம் வெளியானதும், தமிழில்
எனக்கென நிலையான இடம் கிடைக்கும்' என,
சந்தோஷத்தில் துள்ளி
குதிக்கிறார்.
No comments:
Post a Comment